சலீம்-அனார்கலி
இளவரசன் சலீம் ......
நடனமாது அனார்கலியைக் கண்டான்
கண்டதுமே காதல் கொண்டான்
அந்த திறந்த காபூல் மாதுளையை
தந்தை மாமன்னன் இக்காதலை
ஏற்காது அனார்கலியை சிறைபிடித்தான்
அவளை உயிரோடு புதைத்தான் ....
அக்பர் மறைந்தான் சலீம் மன்னன்
ஜஹாங்கீரானான் மும்தாஜை மணந்தான்
மும்தாஜின் அகால மரணம் ஜஹாங்கீரை
பித்தாகியது... அன்பு மனைவிக்கு
கல்லறையாம் தாஜ்மஹால் படைத்தளித்தான்
இதோ யமுனா தீரத்தில் தாஜ்மஹால்
பக்கம் மாமன்னன் ஜஹாங்கீர் உலாவர
நீளவானில் உலா வந்தது வெள்ளிநிலா
அண்ணாந்து பார்த்தான் .......
அன்பே சலீம் என்னருகே வா வா
என்று கூப்பிடும் எதிரொலி கேட்டான்
தாஜ்மஹாலில் அவள் காதல் கீதம்