எட்டாவது வானவில்
தொலைத்தூரத்தில் நீ இருந்தாலும் :
உன் அழகை வர்ணிக்க
நான் காத்திருந்தேன் :
அந்நேரத்தில் எட்டாவது நிறத்தை
என் கவிதையின் மூலம்
உயிர்தெழச் செய்தேன் :
அனைவருக்கும் பசியை போக்கும்
"செடியின் நெல்மணிகள்"
எட்டாவது நிறமாக இருக்குமோ இல்லை?
"காலையில் விழித்தெழும்
கதிரவனின் செங்கதிர் ஒளியோ "
எட்டாவது நிறமாக இருக்குமோ இல்லை?
"காஞ்சி மாநகரத்தின்
மன்னனின் சிறப்போ "
அந்த எட்டாவது நிறமாக இருக்குமோ
இல்லை?
திடீரென்று !
"கண்களிருந்து கண்ணீர் வழிந்தோடியது "
இப்போது புரிந்துவிட்டது
"எட்டாதூரத்தில் இல்லை
அந்த எட்டாவது நிறம் "
என் அருகில் புன்சிரிப்புடன்
லட்சியப் பாதையில்
என்னை அழைத்து செல்ல
உழைக்கிற
"என் அன்பு தந்தைதான்
அந்த எட்டாவது வானவில் "!......