மீண்டும் கருவறை சுகம் தேடி
சுகவாசியாய் ஒன்பதரை மாதங்கள்
சகாக்கள் சத்தமில்லமல்
யுத்தமில்லாமல்
விழித்ததும் வழித்ததா
மருத்தவச்சி !
சுகப்பிரசவம் ஆனதாலோ
சுகம் தேடி தினம்!
சிர்க்கப் பழகி தந்தவர்கள்
சித்திரவாதை செய்ய தொடங்கிவிட்டனர்
மணமில்லா பணம்
மகாத்மாவையும் மாற்றும்
பாடுபாக்க என்னோடு
நாடு கடத்தியிருந்தால்
அமீரகம் நோக்கி..!
கனவுகள் கந்து ரொட்டிகள்
காணும் போது
கண்ணீர் துளிகளாய்
இதயத்திலும்..!
நான் வென்றவைகள்
கரையான் புற்றிலும், கரும்பு சக்கையிலும்
ஏமாப்புடன் இருப்பிடமானது
கானல் நீரும் வற்றியே போனது
கடைசிவரை தாகத்தோடு
பயணம் பாலைவனத்தில்
சோலை தேடி
தற்போது வேலை தேடி !
தாயே...
என் சுவாசம்
யாருக்கும் ஆசுவாசமாக இல்லை
உன் சுவாசத்தில் ஒரு பாதியில் மீதி போதும்
நான்
மீண்டும் உன் கருவறை சேர்கிறேன்
வேண்டாம் என்று விடாதே
நீயும்....?