நகைச்சுவை துணுக்குகள்

அந்தப் பிச்சைக்காரர் ஏன் அவங்க வீட்டுக்கு முன்னாடி உட்காந்து போராட்டம் நடத்திக்கிட்டு இருக்கார்?

நேத்து அவங்க வீட்டுலே போட்ட பழைய சாப்பாடு அவருக்கு ஒத்துக்கலையாம். அதுக்கான மருந்து செலவை அவங்கதான் தரணும்னு போராடறார்.
********************
கடைசியிலே மாப்பிள்ளை குடியும் குடித்தனமுமா செட்டில் ஆயிட்டார் போல இருக்கே?

அதுதான் ரொம்பக் கவலையா இருக்கு. எப்பவும் பாட்டிலும் கையுமா இருக்கார். கேட்டா நான் நீங்க சொன்ன மாதிரி குடியும் குடித்தனமுமாத் தான் இருக்கேங்கறார்
********************
ஆமாம். அங்கே வேலைக்காரியோட என்ன தகராறு?

பத்துப்பாத்திரம் தேய்க்கறதுக்காகத்தானே அவளை வேலைக்கு வச்சோம். இப்ப பதினோரு பாத்திரம் போட்டு இருக்கீங்களே. என்னாலே தேய்க்க முடியாது அப்படிங்கறா
**********

********************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (11-May-20, 12:17 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 57

மேலே