நகைச்சுவை துணுக்குகள்
அந்தப் பொண்ணு 'மாமி உங்க ஆசீர்வாதம் வேணும்' னு கேட்டா.
நானும் அதுக்கென்ன? பேஷா உனக்கு என் ஆசீர்வாதம் எப்பவும் உண்டுன்னு சொன்னேன். அப்படிச் சொல்லிட்டு கொஞ்சநேரம் கழிச்சுப் பாத்தா நான் வாங்கி வெச்சிருந்த 2 கிலோ ஆசீர்வாத் கோதுமை மாவுப் பொட்டணத்தைக் காணோம்.
********************
150 ஆண்டுகளுக்கு முன் ரயில் பயண வசதி வந்தபோது நமது இன்றைய அரசியல் வாதிகள் அன்று இருந்திருந்தால் இப்படி ஒரு போராட்டம் நடந்து இருக்குமோ?
ரயில்கள் ஒழிக. அரசே ரயில்களை எதிர்த்து நாடு தழுவிய மாபெரும் போராட்டம் ரயில்களை வாபஸ் பெறும் வரையில் நடைபெறும். ஒரு ரயில் ஓடுவதால் 13421 மாட்டு வண்டிகள், 10733 குதிரை வண்டிகள், 21347 கைவண்டிகள், 1,34,789 வண்டி ஓட்டுனர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அவர்களை நம்பி இருக்கும் 12,36,528 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு பட்டினி கிடந்து சாக நேரிடும். எனவே உடனே ரயில்களைத் தண்டவாளத்தில் விடுவதைத் தவிர்க்கவும். இன்றேல் ரயில்களை எதிர்த்து மறியல் போராட்டமும், ரயில் கொளுத்தும் போராட்டமும் நடைபெறும் என்று எச்சரிக்கிறோம். அரசே, ரயில்களை உடனே வாபஸ் வாங்கவும்.
******
அவர்: தம்பி, என்ன படிக்கிறே?
பையன்; நான் எம்பிஏ படிக்கிறேன்.
அவர்: ஏன் தம்பி, உக்காந்துகிட்டே படிக்கலாமே. ஏன் எம்பியே படிக்கிறீங்க?
************