கொக்கறுத்தான் கொரோனாவை அழிப்பான்
தென்றல் வலம்வரும் மாவேள் மலைஆறு
குன்றத்தான் நெற்றியில் நித்தம் திருநீறு
கொக்கறுத் தான்கொரோனா வைஅழிப் பான்அறிவாய்
இக்கணமே நீயவனைப் பாடு !
இன்னிசை வெண்பா ---பா வடிவம்
கொக்கறுத்தான் ----கொக்கு = மாமரம்
சூரபதுமன் மாமரமாய் நின்ற போது அவனை
அறுத்து கொன்றான் முருகன் .
ஆதலால் அவன் கொக்கறு கோ !
அவனை கந்தன் சேவல் கொடியாக மாற்றிக் கொண்ட போது
அன்று முதல் சேவல் கூவ இல்லை துதிக்கத் துவங்கியது கொக்கரக்கோ என்று .
வாயில்லா சீவனே பாடும் போது வாயுள்ள மனிதா திருப்புகழால் நீ அவனைப் பாடு !