வாங்க பழகலாம்

சமூக விலகல் என்பது - இந்த
சமூகத்திற்கு புதிதல்ல -
எங்கள் அரசியலார் - சிலர்
ஏற்கனவே - எங்களுக்கு
கற்பித்த பாடம்தான் அது -

தேர்தலில் வென்றபிறகு
தொகுதி பக்கமே வாராமல்
மிக சிறந்த சமூகவிலகலை
மிக சிறந்தமுறையில் கடைபிடிப்பர்;

அதுமட்டுமல்ல - அவர்கள்
அனைவரையும் - பழகிவாழ்ந்திடவும்
அறிவுறுத்தியிருக்கிறார்கள் - அதுவும்
நோயென்ற உறவோடு பழகிட -

ஏற்கனவே - நடுவீட்டில்
எகத்தாலமாய் படுத்திருக்கின்றது
வறுமையெனும் பழைய உறவு -

இறைவா -
இன்னும் என்ன
இங்கே மிச்சமிருக்கு
இம்மக்கள் பழகி வாழ்ந்திட...!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (14-May-20, 10:39 am)
பார்வை : 164

மேலே