காலம் ஒரு நாள் பிடிக்கும்

நச்சுப் புகைகள்
வளிமண்டலத்தின்
புன்னகையைப்
புசிக்கிறது...

வெறித்து வெட்டப்பட்ட
பச்சை இரத்தக் காடுகள்
பழித்துக் கதறி அழுகிறது..

நகரக் குப்பைகள்
நாளுக்கு நாள்
ஊர்வலமாக சுற்றித் திரிகிறது...

குளத்திலும்,ஆற்றிலும்
நஞ்சூட்டப்பட்ட கழிவுகள்
தொர்கதையாக
தொடர்கிறது..

பச்சிளம் மண்ணில்
இரசாயனக் கால்கள்
இராட்சச நடனமாடுகிறது...

கதிர்வீச்சுக்கள்
இயந்திரங்களின் இதயங்களாகி
உயிரினங்களை உருக்குகிறது...

மானிடன் மட்டும்
வாழும் வேளைத்
திட்டங்களைப் பார்த்து
காலம் கைகொட்டிச் சிரிக்கிறது
ஒரு நாள் வேளை காட்ட...

(இஷான்)

எழுதியவர் : இஷான் (22-May-20, 3:34 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 278

மேலே