அழகு நிலா

அழகு நிலா

நிலவைப் பெண்ணென றார்புதுக் கவிஞா்
நிலவின் முகத்தில் காதலன் பிராணடிக்
களங்கம் செய்தானாம் காமுக வெறியனோ
கலைகுறை நிலவை பெண்ணெனல் பாவம்
பெண்ணே எரியுஞ் சூரியச் சுடராம்
பெண்ணேன் பாள்ஞாயி ராம்சக்திப் பெண்ணாள்
தமிழ்நெல்லின் காய்ந்த உமியறியா
தமிழின் புராண விஞ்சானம் படியுமேநீ

தாய்பூமி யைச்சுற்றி யோடபிறை சந்திரன்
சூரியப் பெருந்தாய் ஞாயிறுத்தீ இருள்நிலவாம்
முழுநிலாசந் திரசிவனைத் தழுவிடப் பௌர்ணமியாம்
சந்திரனால் சங்கரன் நாள்திங்கள் என்றார்
முத்தே மானே தேனே காசரு
வித்தே கரும்பே என்றாய் ஓத்தோம்
கோடுபிறை சிவனாம் அல்லா அறிந்துகொள்,
குறைமதியோய் குறைமதியை என்றும்
கூ றாதே பெண்ணுக் குவமை சகியோமே


தனிச்சந்திரன் இருள் கிரகம். இது தெரியாதவன் இராகு கேது களை அறிவானோ அறிவீலி
இருள் சந்திரன் அமாவாசையில் பூமித்தாயை கூடுகிறான். பிறைச்சந்திரன் முதல்பிறை
வெறுமான சந்திரன் முதல் பிறை வலிமையான அல்லாவாம் ஈஸ்வரனாம். உண்மையிது.
புராண விஞ்சானத்தில் சூரியனை சக்திப் பெண்என்றே குறித்தார் சந்திரனை சிவம்
திங்களோன் என்றே குறித்து சொன்னார். காயகற்பம் செய்ய இரண்டு சுயம்பு உப்புக்க
ளைத் தேடியெடுப்பர் ஞானியர் திங்கள் நிலவாம் சந்திரன் உண்மையில் ஒளிராத
கிரகம் அறிவோம். அந்த அமாவாசையில் (சந்திரன் தெரியா நாளில்) சிவ உப்புவரும் அதை
தேடிஎடுப்பர். சூரியன் எனும் சக்தி முழுசாய் சந்திரனின் 15 வது திதி பௌர்ணமியில்
முழுதாய்த் தழுவிட சக்தி உப்பு வெளிவரும் அந்த சக்தியப்பையும் தேடி கண்டுபிடித்து
சிவ சக்தியை சேர்ந்து அகர உகர. 8 2 சேர்த்து காயகற்பம் செய்வாராம். இந்த
தமிழர் விஞ்சானத்தை கவிஞசர்கள் யாரும் படித்ததில்லை. விஞ்ஞானம்
தெரியாமல் பாட்டெழுத வந்தவர்கள். இதையே ஆரியபட்டர் 4000 வருடத்திற்கும் எழுதி
யுள்ளார். அதையும் வடமொழி என்பான்: ஒதுக்குவான். சித்தர்கள் எழுதியுள்ள தமிழ்
வேதத்தையும் படித்தரியமாட்டான். இப்படித்தான் தமிழ் விஞ்சானம் அழிந்தது. பொய்
வளர்ந்தது. நிலவு அழகு என்று சொல் ஒத்துக்குக் கொள்ளலாம். காரணம் தோகை
ஆண்மயிலும், ஆண் மானும்ஆண் காளையும் ஆண்சிங்கமும் ஆண் வேழமும் ஆண்
நிலவும் அழகாம் தெரிந்துகொள்ளுங்கள்..


மூச்சுப் பயிற்சியின் சூரியகலை (பிங்கலை) சக்தி ரவி என்றார் சந்திர கலை ,இடைகளை)
சிவகலை (ஆண்,) என்றார். இரண்டும் ஒன்று சேர அமாவாசை (அலி) என்றார்.
12 கார உப்புக்கள் ஆர்கானிக் (,hydroxides,) என்றார் சார உப்புக்கள் (acids) என்றார்.
கந்தகம் என்ற பெண் பாஷானத்தை மற்ற ஆண் பா ஷானங்சலுடன் கூட்டி புடம் போட்டு
மருந்துகள் செய்வார். இன்னும் பல பல உதாரணங்கள் சொல்லலாம்.
இப்படி ஒவ்வொன்றிலும் ஆண் பெண் என்று பிரித்து வைத்தார்

எழுதியவர் : பழனிராஜன்l (23-May-20, 7:59 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : alagu nila
பார்வை : 3859

மேலே