மழை

மழை

உன்னை தான் மிக ஆவலுடன் எதிர் பார்த்தேன்.
கறு மேக கூட்டங்கள் கூடியதும் எனக்கு மிகவும் கொண்டாட்டம்
காரணம் அடுத்து உன் ஆனந்த வரவு தானே
ஆஹா! ஈர காற்று வீசியதும் உடல் சிலிர்த்து
மனம் பூரித்தது
உன் வரவு அனைத்து ஜீவராசிகளுக்கும் பரிபூரண மகிழ்ச்சி
தூரலாக, சாரலாக
மழையாக நீ அந்த மலை மீதும், மரம் மீதும், மலர் மீதும், மண் மீதும், என் மீதும் பொழியும் போது
அது ஆனந்தத்தின் உச்சம்
அழகின் மகோன்னதம்
வானிலிருந்து விழும் அமுதம் அல்லவா நீ!
உன்னால் உயிர் பெற்ற நாங்கள் எப்படி உனக்கு நன்றி சொல்வது.
உன் வள்ளல் தன்மையை குறித்து வர்ணிக்க
தமிழில் வார்த்தைகளை தேடுகிகிறேன்
கிடைக்கவில்லை.
ஏற்றம், இறக்கம் பாராமல், பாரபட்சம் இன்றி
எங்கும் பொழியும் மாமழையே
உன்னை வணங்குகிறேன்
உன்னிடம் இந்த அற்ப மானுடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய.
என்னென்னவோ விஞ்ஞான உண்மைகள் உன்னை பற்றி கூறினாலும்,
அது எனக்கு தேவையற்றது
நீ இயற்கை அன்னை அனுப்பிய அமுதசுரபி
நீ எப்போதும், எந்நாளும்
எனக்கு அதிசியமே!
அபூர்வமே!
நிறைய பொழிந்து விடு
மறக்காமல் அவ்வப்போது
என்னை தொட்டு விடு.
- பாலு.

எழுதியவர் : பாலு (23-May-20, 10:20 pm)
சேர்த்தது : balu
Tanglish : mazhai
பார்வை : 23

சிறந்த கவிதைகள்

மேலே