ராகு தோஷம்

காற்று சில்லென்று வீசிக் கொண்டு இருந்தது.
சிவா அப்பார்ட்மெண்டில் மூன்றாவது மாடியில் அருட்பெருஞ்ஜோதி ஜோதிட நிலையத்தில் ஜோதிடருக்கு முன்பாக அமர்ந்திருந்த பாலகோவிந்தனும் அவரது மனைவி மீனாட்சி யும் என்ன சொல்லுவார் என்று தெரியல யே?
கட்டத்தை பார்த்து ஏதாவது சொல்லுவார் அதுக்கு மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தா சரி ஆயிடுமா ?சிரிச்ச மூஞ்சி யோட இருந்த என்ன என்றாள் மீனாட்சி .
வாங்க உள்ளே என்று அழைத்தார் ஜோதிடர் .
அறை குப்பென்று நறுமணம் வீசியது. ஊதுபத்தி மணமா?அறைக்கு போடப்படும் சென்டுமணமா ?இல்லை சுவர் முழுவதும் மாட்டப்பட்டிருக்கும் சுவாமி படங்களுக்கு போடப்பட்டிருக்கும் பூமாலைகள் வாசமா ?எதுவென்று உணர்ந்து கொள்ள முடியாத அளவு கலப்பு வாசனை ஒருவித மயக்கத்தை கொடுத்தது மகுடிக்கு கட்டுப்பட்ட பணிவாக அமர்ந்துபால கோவிந்தனும் மீனாட்சியும் ஜாதக நோட்டை கொடுத்தார்கள் .
அவர் நேர்கொண்ட பார்வை யால் பேசியது நடந்தவைகளை சொன்னது ஜோதிடக்கலை யிலேயே வல்லவர் இவர் தான்என்ற எண்ணம் அவர்களுக்கு உதயமானது .
உங்க ஜாதகப்படி நான் சொன்னதெல்லாம் சரியாகத்தானேஇருக்கு என்று கேட்டார் ஜோதிடர் .
ஆமாம் ஐயா எல்லாம் சரி உங்களை தெய்வமா நம்பரோம் .
நாங்க என்ன செய்யணும் .சொல்றேன் வேற ஏதாவது சந்தேகம் இருக்கா?
ஒருத்தருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கடனாக கொடுத்து நாலு வருஷம் ஆச்சு கேட்டபோதெல்லாம் தரேன் தரேன்னு சொல்லிட்டு இன்னும் தர மாட்டேங்குறான் அந்த பணம் வருமா வராதா ?
அதான் சொன்னேனே உங்களுக்கு ராகு தோஷம் இருக்கு .தோஷ நிவர்த்தி செய்யனும். ராகு பூஜை செய்து தோஷ நிவர்த்தி பரிகார பூஜை செஞ்சா உங்க பையனோட திருமணம் பிசினஸ் வராக்கடன் எல்லாம் சரியாயிடும் .
கண்டிப்பா செய்யணுமா ?
கண்டிப்பா செய்யணும் .செய்யாமல் எப்படி பிரச்சனை தீரும் உடம்பு சரியில்லைன்னா எவ்வளவு செலவு ஆனாலும் ஆஸ்பத்திரிக்கு போறோம் இல்ல ?அது போல தான்
சரிங்கய்யா ராகு தோஷ பரிகாரம் செஞ்சிடலாம் .
என்ன செய்யணும் சொல்றேன் பரிகார பூஜை இங்கே எங்கேயும் செய்ய வேண்டாம் .மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுக்கு போய் ஆத்தங்கரை யிலேயே பண்ணலாம் எல்லாப் பொருளும் நானே வாங்கிட்டு வந்துடுறேன் . நாளைக்கு காலையில கார் எடுத்துகிட்டு வாங்க போகலாம் .செவ்வாய்க்கிழமை நாளைக்கு ராகு காலம் மாலை 3 மணியில் இருந்து நாலு மணி வரை பூஜை வந்துவிடுங்கள் .
மகன் பெங்களூரில் வேலை செய்ததால் வரவில்லை என சொன்னவாறே கோவிந்தன் காரில் ஏற
பரவாயில்லை நாம பூஜை செய்யலாம் என்று மூவரும் பவானி ஆற்றங்கரைக்குச் சென்றார் கள் .
தோஷ பரிகார பூஜை நல்லபடியாக முடிந்தது.இனிமேலாவது தோஷம் ஒன்னும் பண்ணாது எல்லாமே நல்லா நடக்கும் .
இந்த தட்டில் இருக்கிற ராகு அப்படிங்கிற சர்பத்தையும் ' (அது மாவால் செய்யப்பட்ட ஒரு பொம்மையாக இருந்தது) தூக்கிகிட்டு ஆத்துக்குள்ள போயி மூணு முறை முழுகனும் .
அப்படி முழுகும் போது பாம்பு இருக்கும் தட்டை அப்படியே விட்டு விடவும் யாரும் யார்கிட்டயும் பேச கூடாது. திரும்பி பார்க்கக் கூடாது .அப்படியே கரையில் ஏறி மாற்றுத் துணி மாத்திட்டு ஊருக்கு போயிடுங்க என்று ஜோதிடர் சொல்ல
சரி என்று பாலகோவிந்தனும் மீனாட்சியும் ராகு பூஜை சிறப்பாக நடந்ததற்கு மகிழ்ச்சி அடைந்து அங்கு பாம்பு இருக்கிற தட்டை தலையிலே வைத்துக் கொண்டு இருவரும் ஆற்றில் இறங்கி நன்றாக மூழ்கி. அவர்கள் கரை ஏறுவதற்கு முயற்சித்த போது திடீரென பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரத் துவங்கியது.
இவர்கள் கரைக்கு வந்தவுடன் கரையேறி தப்பித்தார்கள் ஆனால் கரையில் இருந்தவர்கள் சத்தம் போட்டதைப் பார்த்து என்னவென்று தெரியாமல் திரும்பி கூட பார்க்க கூடாது என்று ஜோதிடர் சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து பார்க்காமலேயே காரில் ஏறினார்கள் .இவர்களுக்கு ராகு பூஜை செய்து முடித்துவிட்டு அனுப்பிய ஜோதிடர் ஆற்றிலே முழுக வேண்டும் என்று ஆற்றிலே முழுகபோன போது திடீரென்று வெள்ளம் வந்ததால் நீச்சல் தெரியாத அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மறுநாள் காலை பத்திரிக்கையை பார்த்த போதுதான் கோவிந்தனுக்கு புரிந்தது ராகுதோஷம் நமக்காக ஜோதிட இருக்கா?என்று

எழுதியவர் : சு.இராமஜோதி (26-May-20, 5:01 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : raagu thosam
பார்வை : 89

மேலே