பிச்சைக்கார்ருலகம் ஜோக்ஸ்

பிச்சைக்கார(ர்) உலகம்
நான் பிச்சை கேக்க வரலை தாயே. நீங்க ஒரு வாரமா Facebook லே எழுதாததைப் பாத்து உங்களுக்கு உடம்பு சரி இல்லையோன்னு விசாரிச்சிட்டுப் போகலாம்னு வந்தேன் தாயே.
                                      **************************************  
ஐயா தர்மம் பண்ணுங்க ஐயா. Full talk time இருக்கற மாதிரி என் செல் ஃபோனை ரீசார்ஜ் பண்ணணுங்க ஐயா.
                                       ******************************
பிச்சைக்காரர் 1: (செல்ஃபோனில்) உனக்கு இன்னிக்கு எவ்வளவு வசூலாச்சு?
பிச்சைக்காரர் 2: உஸ். அத்தையெல்லாம் ஃபோன்லே பேசக்கூடாது. இன்கம் டாக்ஸ்காரங்க tap பண்ணிக் கேட்டுட்டா அப்புறம் ரொம்ப trouble ஆயிடும்.
                                        ***************************************         
ஐயா, உங்க வூட்டு சாப்பாட்டுலே உப்பு சாஸ்தியா இருக்கறதை நீங்க எனக்குப் போடற இம்மாத்தூண்டு பிச்சையிலேருந்து கண்டு பிடிச்சுச் சொல்றேன். அம்மாவை சாப்பாட்டுலே உப்பை கொஞ்சம் குறைச்சலாப் போடச்சொல்லுங்க. இல்லாங்காட்டி வூட்டுலே அத்தினி பேருக்கும் BP வந்து உடம்புக்கு நோவு வந்துட்டா எனக்கு உங்க வூட்டுப் பிச்சை இல்லாம பூடும்.
                                        ************************************    
தாயே, நீங்க வூட்டுக்காரர் கிட்டே எறஞ்சி பேசிக்கிட்டு இருந்தது என் காதுலே வுழுந்துச்சு. சிடி சென்டர்லே யூனிப்ளெக்ஸ்லே நீங்க கேட்ட படம் ஓடுது. நிம்மதியா அங்கே போய்ப் படம் பார்த்துட்டு வாங்க. நான் அப்புறமா வந்து பிச்சை வாங்கிக்கிறேன்.
                                     *************************************
நான் ராப்பிச்சை ரங்கன் தாயே. வர வர கண்ணு சரியத் தெரிய மாட்டேங்குது தாயே. கண் டாக்டர்கிட்டே கண்ணை டெஸ்ட் பண்ணிக்கப் போகணும் தாயே. அதுக்கான செலவுக்குத் தர்மம் பண்ணுங்க தாயே.
                                        **********************************  
அம்மா, தாயே, ஐயா, சாமி  நான் ஒரு வாரம் வேறே வேலையா காசுவல் லீவுலே போறதாலே எனக்குப் பதிலா என் தம்பியை என் ஏரியாவுலே பிச்சை எடுக்க பவர் கொடுத்திருக்கேன். என்னை இதுவரை ஆதரிச்ச பெரியவங்க எல்லாம் எனக்குப் பதிலா என் தம்பியை தொடர்ந்து பிச்சை போட்டு ஆதரிக்கணும்னு கேட்டுக்கறேன்.
                                        ************************************     
நம்ம ராப்பிச்சை Facebook லே என்னமோ எழுதியிருக்கானே. என்னன்னு படி.
"இந்த ஊர் தாய்மார்களே! நான் இந்த மாசம் பூராவும் பிச்சை எடுக்க பக்கத்து ஊருக்குப் போறேன். அதனாலே இந்த மாசம் முழுவதும் என் தொந்தரவு இல்லாம நீங்க நிம்மதியா இருக்கலாம். ஆனா நான்தான் உங்களை ஒரு மாசம் மிஸ் பண்ணுவேன்னு நினைக்கும்போது எனக்குக் கஷ்டமாத்தான் இருக்கு" அப்படின்னு எழுதி இருக்கான்.
                                        ****************************************    
ஏன் ஐயா? நாங்க பாட்டுக்கு அம்போன்னு பிச்சை எடுத்துக்கிட்டு எங்க பொழப்பை நடத்திக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா, எங்களைப் பத்தி ஜோக் எழுதி எங்களை உசுப்பு ஏத்தறே. ஏன் ஐயா உனக்கு இந்த பிச்சைக்காரப் பொழப்பு?
                                        *******************************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (26-May-20, 7:02 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 25

மேலே