கண்ணீரிலே மச்சான்
குளத்தில் போட்ட கூழாங்கல்லாட்டம் /
கிணற்றில் விழுந்த கிணற்று வாளியாட்டம்/
கடலில் நிறுத்தி வைத்த நங்கூரமாட்டம்/
அசையாமலே அமர்ந்து விட்டாய் நீ /
எனது நெஞ்சுக்குழியில் என் சின்ன மச்சான் /
குழம்பில் கலந்திட்ட உப்புப் போல் /
கிளறிய சாதத்தில் ஊற்றிய நெய் போல் /
கசப்போடு கலந்திட்ட புளி போல்/
நீ பிரித்தெடுக்க முடியாத வாறு/
கலந்து உலாவுகிறாய் எனது குருதியிலே மச்சான் /
வேர் ஓடி நீர் தேடிடும் மரம் போல் /
ஊர் ஓடி திரவியம் தேடிடும் உயிர் போல்/
மார்வேறி மிதித்து விளையாடும் மழலை போல் /
என் உணர்வேறி உள்ளம் ஓடி பிள்ளை போல் /
குதித்து விளையாடுகின்றாய் மச்சான்/
கிறுக்கல்கள் எல்லாம் சறுக்களாய்ப் போகிறது/
உன் முறுக்கு மீசையின் அழகை வரையும் வேளையிலே /
துருப்பு ஒன்று தேடுகின்றேன் எழுந்திடும் விருப்பை எல்லாம் சிறப்பாய் எழுதி தூது ஒன்று விட்டிடவே/
குறுக்குப் பாதைக்கும் மறைப்பாச்சு /
பறக்கும் பறவைக்கும் சிறையாச்சு/
எனக்கும் வாழ்க்கையில் வெறுப்பாச்சு/
கொரோனா என்று ஒன்று நம்மைப் பிரிச்சாச்சு/
கருணை உள்ளமோ கண்ணீரிலே மச்சான் /