யுகங்கள் கடந்து வந்த காலப்பயணி

புன்னகைக்குப் பொற்கிழி வழங்கினால்
உனக்கு வழங்கலாம்
பொய்க்குப் பொற்கிழி வழங்கினால்
எனக்கு வழங்கலாம்
சத்தியத்திற்கே பொற்கிழி வழங்குவேன்
என்று வந்து சேர்ந்தான் ஒருவன்
சத்தியத்திற்கு இப்போது
சாத்தியம் இல்லை என்றேன்
திரும்பிச் சென்றான்
யுகங்கள் கடந்து வந்த அந்தக் காலப்பயணி !

எழுதியவர் : கவின் சாரலன் (31-May-20, 10:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே