ஆண்ட்ராய்டும் அன்றாட கல்வியும்
குடும்பத்திற்கான நேரம் - இன்று
குழந்தைகளுக்கான நேரமாகிவிட்டது:-
ஆரம்பமானது - பெருநகரங்களில்
ஆண்ட்ராய்டு போன்களில்
ஆரம்பக் கல்வி -
அன்பிற்குரிய நம் குழந்தைகளின் -
அறிவுமலரானது ஆண்ட்ராய்டுகளின் - அதிநவீன செயலிகளின்வழியே
அரும்ப ஆரம்பிக்கின்றது -
ஆசிரியர்களே -
அதற்கு வழிகாட்டிகளாக இருந்து
அடுத்தக்கட்ட கற்பித்தலுக்கு
அடித்தளமிடுகின்றனர் -
அந்த அடித்தளத்தில் - மாணவர்கள்
அறிவு ஆழமாவதும் - விசாலாமாவதும்
அவரவர் பெற்றோர் கையிலே உள்ளது-
அனைவரும் ஒத்துழைத்தால் -
அனைத்தும் சாத்தியமாகும் - இன்று
ஆண்ட்ராய்டோடு தான் - பலருக்கும்
அன்றாட வாழ்வே தொடங்குகின்றது-
அனைவருக்கும் புதிய கல்விமுறை
அமையட்டும் - கொடிய கொரோனா
அழியும்வரை - நாம் அனைவரும் -
அன்பிற்குரிய நம் குழந்தைகளின்
அறிவுதிறனை மேம்படுத்த - நேரத்தை
ஆக்கபூர்வமாக செலவழித்திடுவோம் -
அகம் மகிழ்ந்த வாழ்வுதனை -
அனைவருமே பெற்று வாழ்ந்திடுவோம்...!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி