மனிதநேய மெல்லிசை

மனிதநேயத்தின் கரு
சிதைந்துவிட்டது -
யானையின் கரு
சிதைந்த போது -

அன்று - பசியோடுவந்த
மது என்ற மனிதனையும் -
மனிதநேயமற்ற முறையில்தான்
அடித்து கொன்றார்கள் -
இன்று - பசியோடுவந்த யானையையும்
இரக்கமின்றி வெடிவைத்து கொன்றார்கள்

உண்ணமுடியாமல் -
உணரும் வலியைக்கூட கூறமுடியாமல்
நீருக்குள்ளே நின்றவண்ணமாய்
நிலைகுனிந்து மனமுடைந்து
உடல்தளர்ந்து - இறுதியில்
உயிர்தளர்ந்து மரணித்தது யானை -

உயிர் இழந்தது மனிதனெனில்
உடனே நிவாரணம் அறிவிப்பீர் ;
உயிர் இழந்தது யானையாயிற்றே
உயிர் இழந்த யானையின் குடும்பத்திற்கு
அரசாங்க வேலை சாத்தியமா -இல்லை
அப்படியெனில் எது சாத்தியம்...?
அந்த யானையை புதைத்த இடத்தில்
அனைவரும் சபதம் எடுங்கள் - இனி
நம்பிக்கை துரோகத்தை -
நம்பிய மனித உள்ளங்களுக்கு மட்டுமல்ல
நம்பிய விலங்குகளுக்கும் -
நாங்கள் செய்யமாட்டோமென்று -

இந்த தேசத்திற்கு வேண்டியது
துரோகம் எனும் வெடிசத்தமல்ல
இந்த தேசத்திற்கு வேண்டியது
மனிதநேயம் எனும் மெல்லிசை
அது மனதினை வருடவில்லை
என்றாலும் பராவயில்லை
அது மனதினை காயப்படுத்தி
எல்லோரையும் அழவைக்காமல்
இருந்தால் அதுவே போதுமானது....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (5-Jun-20, 5:17 am)
பார்வை : 108

மேலே