ஒரு கட்சி ஆரம்பிக்கணும்

எதுக்குடா மகனே திடீர்னு ஒரு புதுக் கட்சியை ஆரம்பிக்கணும்னு சொல்லற?
@@|@|
அப்பா நீ படிக்கில. ஊரில ரவுடித்தனம் பண்ணீட்டு திரிஞ்சயாம். அப்பறம் கள்ளச்சாராயம் காச்சி பணம் சேத்துட்டு இருக்கிற. உங் கள்ளச்சாரயத்தை வித்தவங்கதான் மாட்டிகிட்டு பலதடவை செயிலுக்குப் போயிட்டு வந்தாங்க. ஆனா நீ நல்லவன் மாதிரி வேசம் போட்டு தப்பிச்சிட்டு இருக்கிற.

இதுவரைக்கும் சம்பாதிச்சது போதும். இனி நிம்மதியா வாழணும்
|@@@@@
ஓ... அதுக்குத்தான் அரசியல் கட்சி தொடங்கும்னு சொல்லறியா?
@@@@@@
உங்க கள்ளச்சாராய பணியாளர்கள் மொத்தம் இருபத்தி அஞ்சு பேரு. இவுங்கள வச்சே ஒரு கட்சியை ஆரம்பிச்சிடுலாம்.

ஒரு நன்கொடை புத்தகம் அச்சடிச்சாப் போதும். வசூல் வேட்டை நடத்திடலாம் பெரிய கடைங்க தொழிற்சாலைங்களுக்கு நம்ம ஆட்களை அதாவது தொண்டர்களை கூட்டிகிட்டு போனாவே.கூட்டத்தைப் பாத்து பயந்திட்டு நன்கொடை தருவாங்க.


அப்பப்ப சாலை மறியல் பண்ணினா நம்ம கட்சிக்கு இலவசமா விளம்பரம் கிடைக்கும். அரசியலுக்கு எந்தத் தகுதியும் தேவை இல்ல. என்னப்பா சொல்லற?
@@@@@@
டேய் மகனே நீ எம் பையன்ங்கிறதை நிரூபிச்சிட்டீடா. புலிக்குப் பொறந்தது பூனையாகுமா. சரி. சரி. கட்சிப் பேரை நீயே முடிவு பண்ணீடுடா.

எழுதியவர் : மலர் (5-Jun-20, 8:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 53

மேலே