வானவில்
நீலவானில் நாம்காணும் அற்புத
நல்லதோர் காட்சி வானவில்
வெய்யோனும் இந்திரனும் நமக்கு
கூட்டாய் படைத்தளிக்கும் விண்ணவர்
கைவண்ணம் மாயாஜாலம் வானவில்
எட்டிப் பிடித்துவிடலாமோ என்று
எட்ட மனதில் பார்க்க
வந்தசுவடு தெரியாமல் காணாமல்
போகுமே மாயம் அதுவே