பொய்யிலா மெய்யர்

திருத்துருத்திப் பெருமானைத் தரிசிக்கச் சென்ற கவி காளமேகம், பெருமானின் ஆபரணமாகிய பாம்பினைக் குறிப்பிட்டு இவ்வாறு பாடுகிறார்.

நேரிசை வெண்பா

காலையிலும் வேலை கடையக் கயிறாகும்
மாலையிலும் பூமுடித்து வாழுமே - சோலைசெறி
செய்யிலா ரம்பயிலும் செந்துருத்தி மாநகர்வாழ்
பொய்யில்லா மெய்யரிடும் பூண். 129

- கவி காளமேகம்

பொருளுரை:

சோலைகள் செறிந்துள்ள வயல்களிடத்தே முத்துக்கள் விளைகின்ற 'செந்துருத்தி' என்னும் இப்பெரிய திருநகரில் கோயில் கொண்டிருக்கும் பொய்யிலா மெய்யராகிய பெருமான் அணிந்து கொண்டிருக்கும் ஆபரணமும் ஒர் ஆபரணமாமோ? அது காற்றையே உண்ணும். பாற்கடலைக் கடைவதற்கு மத்துக் கயிறாகவும் விளங்கும். திருமால் உண்ணுகின்ற உலகத்தினை முடிமேற் சுமந்தும் அது வாழ்ந்திருக்கின்றதாகுமோ?

கால் + அயில் = காலையிலும் = காற்றை உண்ணும். வேலை - கடல் மால் + அயிலும் = மாலையிலும்
பூ + முடித்து = பூ முடித்து = பூ - பூமி முடித்து முடி மேலாகக் கொண்டது,

பொய்யிலா மெய்யர் - நித்தியமான மெய்த் திருமேனியினை உடையவர்; சிவபிரான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jun-20, 7:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே