திருத்தொண்டர் வெண்பா மாலை பகுதி 3
குலசேகர ஆழ்வார் பெருமை
படியாய்க் கிடக்கும் பணிவுடையான், வெற்றி
முடியாளும் சேரர் முதல்வன் - வடிவார்ந்த
பொற்கொன்றைச் சூடும் புகழ்க்குல சேகரன்றன்
சொற்கேட்டால் ஓடும் துயர்.
திருமங்கையார் பெருமை
வாடி வருந்தி மனமுருகிச் செஞ்சொல்லால்
பாடிப் பலகவிகள் பண்ணெடுத்தான் - நாடும்
மெலியோர் இடர்க்கெடுக்க வெற்றிவாள் ஏந்தும்
கலியன் கவியே கவி!
திருமழிசையார் பெருமை
மானிடர் தம்மைத் தொழமறுத்து மாநகரைத்
தானகல நேரத் தளராதார் - தேனொழுகும்
சந்த விருத்தமும் வெண்பாவும் தந்தருள
வந்தார் மழிசை மகான்.

