நகைச்சுவை துணுக்குகள் 9

உன் புருஷன் காணாமல் போயிட்டார்னு சொன்னே. ஆனா பேப்பர்லே நீ காணாமல் போயிட்டதாக உன் படத்தோட விளம்பரத்தைக் கொடுத்திருக்கே. ஏன் அப்படி செஞ்சிருக்கே?
ஓ! அதுவா? அவர் காணாமல் போனதா சொல்லி விளம்பரம் கொடுத்தா அவர் கட்டாயம் வீட்டுக்கு திரும்பி வரமாட்டார். ஆனால் நான் காணாமல் போனதா விளம்பரம் கொடுத்தா அவர் கட்டாயம் உடனே வீட்டுக்குத் திரும்பி விடுவார். அதனால் தான் அப்படி செஞ்சிருக்கேன்.
*************
எப்பப் பார்த்தாலும் அவன் ஏன் மூக்கை சிந்திக்கிட்டே இருக்கான்?
அதுவா? அவனோட ஆசிரியர் எப்பவும் சிந்தி, சிந்தி சொல்லுவாராம். அதை அந்தப் பையன் தப்பா புரிஞ்சிகிட்டான்.
*****************
ஜோசியர்: இப்ப உங்களுக்கு இருக்கிற தோஷத்துக்கு பரிகாரமா நீங்க உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஒரு பழத்தை தினமும் முருகனுக்கு படைச்சிட்டு முழு பழத்தையும் வேறே யாரோடேயும் பங்கு போட்டுக்காம சாப்பிடணும்.
அவர்: அப்படியா?
ஜோசியர்: என்ன யோசிக்கிறீங்க?
அவர்: எனக்கு ரொம்ப புடிச்ச பழம் பலாப்பழங்க!
*****************
நகைக்கடைக்காரர்: வாங்க, வாங்க.
வந்தவர்: (ஒரு மாதிரியாக குரலை வைத்துக் கொண்டு) வாங்க வரல்லே. விக்க வந்திருக்கேன்.
நகைக்கடைக்காரர்: (நக்கலாக) விக்க இங்க ஏன் வரணும்? வீட்டிலேயே உட்கார்ந்துகிட்டு விக்கு விக்குனு விக்க வேண்டியதுதானே. அதையேன் இங்கே வந்து சொல்றீங்க?
வந்தவர்: நான் நகையை விக்க வந்தேங்க. அதைச்சொல்ல வந்தேன்
*****************

அவர்: ஊர்லே எங்கே பார்த்தாலும், கொரோனா காய்ச்சல், பறவைக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல்னு ஒரே காய்ச்சல் மயமா இருக்கு. ஒரே கவலையா இருக்கு.
விவசாயி: என் தோட்டத்திலே காய்ச்சலே இல்லேங்கறது தான் என்னோட கவலை .
******************
பாகவதர் என்ன பண்ணிண்டு இருக்கார்?
சாதகம் பண்ணிண்டு இருக்கார்.
அவர் பண்றதைப் பார்த்தா சாதகம் பண்ணிண்டு இருக்கிற மாதிரி தெரியல்லை.
****************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (18-Jun-20, 3:03 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 85

சிறந்த நகைச்சுவைகள்

மேலே