மனிதனின் மறுபக்கம்

காலம் நம்மில் பலரை
சுயநலவாதிகளாகவே வளர்த்துவிட்டது
பொதுநலம் மறந்துவிட்ட செயலாகவே மாறிப்போய்விட்டது ...............

வெளிப்படை நம்மில் பலரிடம் இல்லை
உள்ளொன்று இருப்பதும்
வெளியொன்று உரைப்பதும்தான்
இன்றைய மனிதனின் வாடிக்கை ...............

வேடிக்கை காட்டும் விளம்பர மனிதனின்
ஆதிக்கம் தான் இந்த உலகத்தில் அதிகம்
கூறுவதுபோல் இல்லாமல்
மாறுவதே மனிதனின் இயல்பு ...............

குரூர எண்ணம்தான்
நம்மில் குடிகொண்டு இருக்கிறது
சமாதானங்கள் சாகடிக்கப்பட்டு
சமாதிக்குள் சருகாகிவிட்டன ................

போதிக்கும் மனிதனும் பொறுமைகாக்காத
அவசரகால அத்தியாயத்தில்
உலகம் இயங்குகிறது என்பதுதான் உண்மை .............

வெறுப்புக்கட்ட இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கையில்
இரக்கம் கட்ட எத்தனைபேர் என்றால்
விரல்கணக்கு போதும் ............

பள்ளி குழந்தைகளைக்கூட
பாலியல் இச்சைக்கு ஆளாக்கும் மனிதனின்
அகோரா புத்திக்கு மனித தண்டனைகள் போதுமானதாக இல்லை ..............

கஷ்டத்திற்கு வாங்கிய காசுக்கு
கந்துவட்டி வசூலித்தும்
உயிரையே அசலாய் கேட்பதுதான்
அக்கிராமத்தின் உச்சம் .............

மற்றவரின் பேச்சைக்கேட்டு
பெற்றவரை அனாதையாக்குவது
குடித்தனத்தின் இன்றைய அடிப்படை பண்பு .................

நேர்மையானவர்கள் அவமதிப்பதும்
குறுக்குவழியில் கோட்டையை பிடிப்பதும்
இன்றைக்கு புத்திசாலித்தனத்தின் உச்சம் ..............

எதார்த்தவாதிகளின் ஏக்கம்
என்றைக்குத்தான் மாறுமோ இந்த உலகம்
என்பதாகவே இன்றைக்கும் இருக்கிறது ...............

காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப
வேஷமிடும் மனிதர்கள்
நாடக மேடை இல்லாமலேயே
நடிக்கும் கலைஞர்கள் ............


கவிஞர் சுந்தர . விநாயகமுருகன்

எழுதியவர் : விநாயகமுருகன் (18-Jun-20, 10:19 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 369

மேலே