இந்தியா-சீனா
இந்தியா சீனா எல்லைக்கோடு
இந்தியாவின் பக்கம் அது
அமைதி புறாக்களின் வாசம்
நேசத்தின் வாசமே தந்திட
சீனாவின் பக்கம் அது
வன்மமும் வஞ்சமும் வாசமாய்
விண்ணை மாசு படுத்துதே
ராஜாளி கழுகுகள் விண்ணில் பறக்க
இந்தியா- சீனா 'பாய், பாய்' அன்று
இன்று அது ' பை ...... பை,,,,, ஆகிடுமோ
என்று அஞ்சுகிறேன் நான்
'ஜெயதி ஜெயதி பாரத மாதா
எம் மண்ணைக் காக்க எம்மையே
தந்திடுவோம் வீரமே எங்கள் நேர்மை
நேர்மையான வீரம் எமது