அணுக்கரு
யாரேனும் எங்கேனும்
வரவோ இருக்கவோ செய்ய...
எழுதும்போது தெரிவதில்லை
என் கவிதையில்.
கவிதையில்...
யாரோ இருந்து
என்னவோ சொல்கிறார்கள்.
அம்மொழி எனது
மொழியல்ல எனினும்
என் கவிதைதான்.
உடலும் உயிருமாக
ஒவ்வொரு சொல்லிலும்
அவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு பழங்கனவை
ஒரு புராதனத்தை
களிப்புற்று கொண்டாடவோ
வசை பாடவோ தெரிந்த
அவர்களுக்கு அந்த
என் கவிதையில் என்ன வேலை?
அவர்களே சொன்னார்கள்.
இறுதியில்...
எங்கிருந்தோ
யார் யாரோ வந்து
மகிழ்ந்தும் அழுதும்
மறைந்து செல்ல...
உன் மனதில்
நீ மட்டும் நீயாக
இருக்கமுடியாது.