சுஷாந்த் சிங் ராஜ்புத்

தோனி வாழ்க்கய
தோனியா ஏற்றி
கலங்காம கரைக்கு
கொண்டுவந்து சேர்த்தவனே!

சிரிப்பாலயே
இளசுகளோட
மனசுல இருக
இடம் புடிச்சவனே!

இவன் வளர்ந்து
வருவான்னு
அதிக வாய்கள
அலற வச்சவனே!

வெள்ளைக் கனவுகள
நெருப்பு நெருங்கிவிட
உருகி,உதறி
உதிர்ந்து கிடந்தவனே!

மனஅழுத்தம்
மறுக்கி நறுக்க
மயக்கத்தோட
காலம் களிச்சவனே!

ஊரடங்கு
ஊன்றி ஊசி ஏற்ற
உழைப்ப எண்ணி
உருண்டு கிடந்தவனே!

வஞ்சகர்கள்
வதைத்து வடிக்கச் செய்ய
வளைந்து
நிமிராம போனவனே!

கடைசியில பிறப்ப
வெறுப்பா நினைச்சி
இறப்ப இனிப்பா
தேடிப் போனவனே!

உன்னோட
சின்ன உலகம்
சில்லின்றி கிடக்குதுயா
சிட்டுக்குருவியா ஊடகம்
உன்னத் தூக்கி பறக்குதுயா!

உன்னோட
அவசரப் பயணத்தால
அதிர்ந்து அறுந்து
கிடக்குதுயா இந்த மனசு!
(இஷான்)

எழுதியவர் : இஷான் (21-Jun-20, 9:30 am)
சேர்த்தது : இஷான்
பார்வை : 66

மேலே