மௌனம்

மழைத்துளிகள் மௌனமாய் இருக்குமெனில் செடிகள் வாடி வதங்கிவிடும்,
மலர்கள் மௌனமாய் இருக்குமெனில் தென்றல் வீசுவது நின்றுவிடும்,
தென்றல் மௌனமாய் இருக்குமெனில் மலைகள் யாவும் குன்றிவிடும்,
மலைகள் மௌனமாய் இருக்குமெனில் மேகங்கள் சோகத்தில் மூழ்கிவிடும்,
மேகங்கள் மௌனமாய் இருக்குமெனில் சூரியன் மேகத்தை விட்டு விலகிவிடும்,
சூரியன் மௌனமாய் இருக்குமெனில் உலகமே இருளில் கரைந்துவிடும்,
மௌனம் கொள்ளாத இரவு மட்டும்  எல்லோருடனும் உரையாடி உயிர் கொடுக்கிறது...

எழுதியவர் : ஈஸ்வர் திரவியம் (22-Jun-20, 7:23 am)
சேர்த்தது : Eswar Diraviam
Tanglish : mounam
பார்வை : 237

மேலே