அன்புள்ள அப்பா

வியர்வை
வாசம்
"அப்பா"

உழைப்பைத் தவிர
ஒன்றும் தெரியாதவர்கள்- இந்த
அப்பாக்கள்.!!!

ஆசையாய் பேசி
அன்பை காட்டத் தெரியாது
இவர்களுக்கு.!!!

கஷ்டங்களை - வீட்டின்
கண்ணாடிக்கு கூட தெரியாமல்
மறைக்க தெரிந்த
மாய வித்தைக்காரர்கள்.!!!

பத்துமாதம் சுமப்பவர்கள்
அம்மாக்கள்...
பதினாறு வருடங்களுக்கு மேலாய்
என்றும் சுமப்பவர்தான்
அப்பா.!!!

பிள்ளைகள்
தொட்டிலில் தூங்கியதை விட
அப்பாக்களின்
தோளில் தூங்கியது தான் அதிகம்.

நடைவண்டியென
கைப்பிடித்து...
நடக்கப் பழக்கியவர்கள்.!!

இன்று
எத்தனை சம்பாதித்தாலும்
சிறுவயதில் தினம்
செலவுக்காய் அப்பா கொடுத்த- அந்த
வியர்வை நோட்டுகளின்
நிறைவை
ஏவையும் கொடுத்ததில்லை.!!!

எழுதியவர் : மருத கருப்பு (22-Jun-20, 11:38 am)
சேர்த்தது : மருத கருப்பு
Tanglish : anbulla appa
பார்வை : 278

மேலே