எறும்பு வயல்கள்

எறும்பின் கண்களில்
குதித்து அ(க)லையும்
மலைமுகடின் மரம்.

வரிசை வரிசையாக
போகும் எறும்புகளின்
வரிசை வரிசையான
ரயில் மனங்கள்.

நதியை நனைக்கும்
எறும்பின் நிழலில்
ஒடுங்கி நிற்கும் பூமி.

எறும்போடு அலையும்
ஒற்றை அரிசியில்
பசித்த வயலின் புன்னகை.

எறும்புக்குள் புகையும்
காலத்தின் ஒலியில்
இனிப்பின் மயக்கம்.

துயிலில் உருகும்
எறும்பின் காற்றுக்குள்
குளிரும் வெப்பம்.

எழுதியவர் : ஸ்பரிசன் (22-Jun-20, 5:37 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : erumpu vayalgal
பார்வை : 144

மேலே