மங்கையர் கண்ணீரோ காவிரி நதியாய்..

பணமே இல்லா நிலையால் வாடி..
மணம் கொள்ளவே முடியாமல் மனம் வாடி..
ஏங்கும் மங்கையர் பலர் கோடி..

காவிரி நதியாய் கண்ணில் கண்ணீர் ஓடி..
நிதி கேட்கும் மணவாலரை நினைத்து மனம் வாடி..
அவள் வாழ்கை போனதுவே இளமை ஓடி..

விதி மீறியே கைக்கூலி கேட்டிடும் பாவியர் தனை தேடி..
தூக்கிலிடல் தப்பிலை என்பேன் என் தோழி உனை நினைத்து மனம் வாடி..
கொடும் சீதனம் கேட்கும் விஷப்பாம்புகளை கல்லெறிந்து விரட்டிடு நீ ஓடி..

வேண்டாம் இந்நிலை தொடரவென்று இளையோர் கூடி..
ஒதுங்கிக்கிடக்கும் மங்கையர் தனை தேடி..
மணப்பது என்னாள் சொல்லடி மனம் நாடி..

குடி கொண்டு குடி கெடுக்கும் பாவியர் மிகை கோடி..
அதிலே கைக்கூலி கேட்டே குடி கெடுக்கும் பலர் கோடி.
வேண்டாம் இந்நிலை தொடர மனிதம் கொண்டு உன் மனம் நாடி..





எழுதியவர் : தோழி... (17-Sep-11, 7:56 pm)
பார்வை : 394

மேலே