நீங்கள் சாதிக்க வேண்டுமா...?

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

புழு கூட
வண்ணத்துபூச்சியாகலாம்
கூட்டுக்குள்
அடைத்துக் கொண்டால்.....

தண்ணீர் கூட
முத்தாகலாம்
சிப்பிக்குள் தங்கிக்கொண்டால்.....

விதைக் கூட
விருட்சமாகலாம்
மண்ணுக்குள் புதைந்து கொண்டால்....

சங்கு கூட
வெண்மையாகலாம்
நெருப்புக்குள் விழுந்து கொண்டால்....

மனிதன் கூட
"சாதனையாளர்" ஆகலாம்
வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டால..


*கவிதை ரசிகன்*

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

எழுதியவர் : கவிதை ரசிகன் (27-Jun-20, 8:49 am)
பார்வை : 53

மேலே