பள்ளி நினைவுகள்

விளையாட்டு பருவங்கள் விலைமதிப்பற்ற நினைவுகள்

நினைவுகளோடு பயணிப்போம் வாருங்கள்...

என் பள்ளி பருவத்தில் நான் எப்படி இருப்பேன் எப்படி இருந்தேன் .. தெரியுமா???
எங்க பள்ளியில் நான் நான்காவது வகுப்பு படித்திருந்தேன்...என் வகுப்பில் நான் தான் முதல் மாணவி
ரொம்ப திமிரு பிடிச்சவள்.. கரும்பலகையில் நான் தான் எழுதுவேன்.. நான் மாணவ தலைவி
ஆசிரியர் இல்லாத சமயங்களில் பேசுபவர்கள் பெயரை கரும்பலகையில் எழுதுவோம்...
அதே போல மற்ற வகுப்பில் போய்
புத்தகங்கள்,பேனா , நோட்டுகள் வாங்கி வரனும் னா கூட நான் தான்.
போவேன்..

மதியம் வேலையில் உணவு சாப்பிட
வீட்டுக்கு போக மாட்டேன்.. என் தோழிகள் எனக்கு வீட்டுக்கு போய்
உணவு வாங்கி வந்து தருவார்கள்.. அனைவரும் வகுப்பில் அமர்ந்து பகிர்ந்து சாப்பிடுவோம்... சாப்பிட பிறகு விளையாடுவோம்.. சந்தோஷமாக இருப்போம்... பள்ளி பருவத்தில் நாம் ரசிக்கும் நினைவுகள், பழக்கும் நண்பர்கள்
விளையாட்டு கோபம்,போட்டி,படிப்பு
நண்பர்களுடன் கா பழம் விடுவது,
எச்சில் உணவு பகிர்ந்து,நிறைய நிறைய நினைவுகள்,
எங்க ஆசிரியர்கள் கலை டீச்சர், சரஸ்வதி டீச்சர்,அமலோர்பம் டீச்சர்,சுகுணா டீச்சர், குண்டு வாத்தியார்,தங்கம் வாத்தியார்,சோதி டீச்சர் நிறைய நினைவுகள்...
திடீரென நான் என் பள்ளியில் உட்கார்ந்து படிக்கும் நினைவுகள் வந்து போகுது.,.ம்அம்அஅம்அஅ

நினைவுகள் நல்ல நினைவுகள் வாழ்கையில் திரும்பி பார்த்து ரசிக்க வைக்கிறது...

எழுதியவர் : உமா மணி படைப்பு (28-Jun-20, 11:11 pm)
சேர்த்தது : Uma
Tanglish : palli ninaivukal
பார்வை : 111

மேலே