கண்ணம்மா

மணி 7 ஆகப் போகிறது எந்திரிங்க...
டெய்லி நீங்க லேட்டா கிளம்புவதனால் நானும் லேட்டா போயிட்டு திட்டு வாங்க வேண்டி இருக்கு ..சீக்கிரம் எந்திரிங்க என்ற சத்தம் கேட்க்க கட்டிலில் தலை முதல் கால்வரை இழுத்துப் போர்த்தி படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் மோகன் அட ஒரு அஞ்சு நிமிஷம் ப்ளீஸ் என கெஞ்சிக்கொண்டே புரண்டு படுக்கிறார்...
ஒருவித எரிச்சலுடன் குழலி கையில் காபி கொண்டு வந்து அவர் படுக்கையின் பக்கத்தில் உள்ள மேசை மீது வைத்துவிட்டு நான் குளிக்கப் போகிறேன் சீக்கிரமாக எழுந்து காபி குடித்து விட்டு கிளம்புவதற்கு பாருங்க என சொல்லி விட்டு குளிக்க செல்கிறாள்..

சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழும் மோகன் தன் படுக்கையின் முன் சுவற்றில் மாலை போட்டு மாட்டி வைத்துள்ள தன் மனைவியின் போட்டோவிற்கு ஒரு குட் மார்னிங் வைத்து விட்டு காபியை ருசி பார்க்கிறார்...

சிறிது நேரத்தில் குளித்து விட்டு பள்ளி சீருடையில் வெளியே வரும் குழளி தன் அப்பாவை பார்த்து நீ டெய்லி லேட்டா எந்திருச்சு கிளம்புவதுனாள நானும் டியூஷனுக்கு லேட்டா போயி டீச்சர் கிட்ட திட்டு வாங்க வேண்டியிருக்கு...
இனி நீ லேட்டா எந்திரிச்சா நான் சாப்பிடாம ஆட்டோ புடிச்சு போயிடுவேன் பாத்துக்கோ.. என பேசிக்கொண்டே அடுப்பங்கரை உள் செல்கிறாள் .. என்ன பேசுவது என தெரியாமல் மோகன் வழிந்து கொண்டே sorryடா குட்டிமா அஞ்சு நிமிஷத்துல குளிச்சிட்டு வந்து ரெடியாயிடுவேன் என சமாளித்து விட்டு செல்கிறார்
..

எழுதியவர் : ஜீவன் (2-Jul-20, 12:58 am)
சேர்த்தது : Ever UR Jeevan...
Tanglish : kannamma
பார்வை : 76

மேலே