இது மட்டும் எப்படி
சத்தியமாக தெரியாது
இடுப்பு துண்டு அவுறாமல்
கண்மாயில் நீச்சல் அடிக்க
கடைக்கு போனால்
கடலை பருப்பு துவரம் பருப்பு
வேறுபாடு தெரியாது
அடிக்கடி மறப்பதுண்டு
இடப்பக்கம் திரும்புகையில்
இன்டிகேட்டர் போட
மீன் முட்டை போடுமா
குட்டி இடுமா
இப்பொழுதும் தெரியாது
எப்படிதான் தெரிகிறதோ
யாருக்கும் புரியாமல்
கவிதை எழுத