விடியலை நோக்கி

பள்ளம் மேடு கண்டோம்
வாழ்வில்
நூற்றாண்டு காணா வீழ்ச்சி
அங்கும் இல்லை இங்கும் இல்லை
எழுச்சி
அங்கலாய்க்கும் வல்லரசுகள்
ஏழையும் பணக்காரனும்
பேதமில்லை இதற்கு
என்று தீரும் இந்த நிலை
எல்லோரும் அச்சத்தில் முடக்கம்
அங்கொன்றும் இங்கொன்றும்
மக்கள் நடமாட்டம்
பாதை அறியா குழந்தைகளாய்
மக்கள்
என்று தணியும் இந்த நிலை
ஏங்கித்தான் தவிக்கின்றது உலகம்
தீர்வு எங்கே / புரியவில்லை
ஆனாலும் ஒரு நம்பிக்கை
இதுவும் மாறும்
புயல் அடிக்கிறது போன்று
உணர்வு எல்லோர் மனதிலும்
ஆனாலும் புயல் அடித்து ஓய்ந்தது போல்
அமைதி ஓன்று நிரம்பி வழிகிறது உலகில்
என்று காண்போம் விடியல்
எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திருப்போம் விடியலை நோக்கி

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Jul-20, 12:55 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : vitiyalai nokki
பார்வை : 289

மேலே