என்னுடன் நடை போடும் உன் நினைவுகள் 555

என்னுயிரே...
இருபக்கமும் பனிப்போர்வை
இடையில் நான் நிற்கிறேன்...
இருளில் என் பின்னல்
நீ இருந்தாலும்...
எனக்கு நீ
தெரியப்போவதில்லை...
என் முன்னாள்
நீ இருந்தாலும்...
எனக்கு
தெரியப்போவதில்லை...
என் கரம் கோர்த்தால் மட்டுமே
நான் உணர்வேனடி...
நீ என்னுடன்
இருக்கிறாய் என்று...
காலமெல்லாம்
என் கரம்கோர்த்து...
என்னுடன் நீ
வருவேன் என்றாய்...
வார்த்தையில்
மட்டும்தான்
உன் அன்பு...
உன் அன்பு...
நிஜத்தில் என்னுடன்
நடைபோடுவது...
உன் நினைவுகள்
மட்டும்தான்...
உலகை ரசிக்க
ஆசை இருந்தும்...
நான் பனிப்போர்வைக்கு நடுவில்
நின்று கொண்டு தவிக்கிறேன்...
உன்னால் உள்ளம் நொந்து
துடிக்கிறேன் தினம் தினம்.....