ஆணின் வெட்கம்

தூரிகை புனைந்திடாத ஓவியம்
காகிதம் கண்டிடாத காவியம்
குழல் எழுப்பிடாத ஒலி
குறள் சொல்லிடாத மொழி
இதழ் பேசிடாத பதம்
இணையம் அறிந்திடாத அர்த்தம்
பெண் பாலின் மிச்சம்
ஆண் அழகின் உச்சம்
ஆணின் வெட்கம்

எழுதியவர் : லக்கி (13-Jul-20, 10:40 am)
Tanglish : aanin vetkkam
பார்வை : 69

மேலே