காதல் நிறைந்தது
காதல் நிறைந்தது ஆண்களின் பார்வை
பெண்கள் யாவரும் தேவதையாயின்
காமம் நிறைந்தது ஆண்களின் பார்வை
பெண்களுக்கு எதுவும் தேவையாயின்
தவறுகள் யாவும் சரியாய் மாறும்
பெண்களுக்கு பிடித்த ஆடவன் ஆயின்
சரியாய் செய்து துணையாய் வரினும்
தவறாய் மாறும் பிடிக்கா பெண்டீர் ஆடவனாயின்
அழகாய் பிறந்த பெண்கள் யாவரும்
அழகிழந்த ஆடவனை விரும்புவது ஏனோ?
அழகிய பெண்களை மணந்த யாவரும்
அடுத்த தலைமுறை பற்றி அறியாதது ஏனோ?
------ நன்னாடன்.