சிற்றோடை இடுப்பழகி
வெற்றிலை கண்ணழகி வில் போன்ற புருவழகி
வெண்பனி கழுத்தழகி வியக்க வைக்கும் விழியழகி
பவழத்தை பழுக்கக் காய்ச்சியது போல் பரவச வாயழகி
பளிச்சென்ற பல்லழகி பன்னீர் தூவும் சிரிப்பழகி
சிற்பத்தின் மூக்கழகி சிங்கார முடியழகி
சிற்றோடை இடுப்பழகி சிலிர்க்கவைக்கும் வயிற்றழகி
அங்கம் முழுதும் தங்கம் மின்னும் ஆடம்பர தோலழகி
அழகான பெண்கள் அஞ்சும் ஆர்ப்பரிக்கும் பேரழகி
மனம் விரும்பும் மார்பழகி மல்லிகை மண வாச அழகி
மயங்க வைக்கும் பேச்சழகி மதிய வெயில் கோப அழகி
ஆண் மயிலின் பின்னழகி ஆனை தந்த காலழகி
அவ்வளவு அழகாய் வந்து ஆசை மூட்டிச் சென்றவளே
அங்கங்குளிர அணைத்து என்னை அழகு முத்தம் தருவாயா
------ நன்னாடன்.