புரட்சி

அதிகார மென்கின்ற
-ஆயுதத்தை வைத்துக்கொண்டு
எதிராளி என்றிங்கே
-ஏழைகளை வதைத்தெடுக்கும்
சதிகாரக் கூட்டத்தின்
-சர்வாதி காரந்தன்னை
புதிராக வேரறுக்கும்
-புயலொன்றே புரட்சியாகும்.
**
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Jul-20, 1:35 am)
பார்வை : 137

மேலே