அணைப்போம் அமைதி

உள்ளம் கேட்கிறது
சிரிப்பாயா மனிதா /
நிஜத்தின் சிரிப்பு எங்கே/
விரக்தியின் விளிம்பில்
மனிதன் செல்வதை
சகிக்க முடியவில்லையே,

முக கவசத்தில் மனிதனின்
சிரிப்பும், மன இறுக்கமும்
மவுனத்தில் புரிகின்றது ,
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
எல்லோரும் இன்று ஒன்றே
பொறாமை, பேதமை
தன்னடக்கத்தில் மவுனிக்கின்றது
.
மீண்டும் நாளைய உலகில்
நற்பண்பும் நலம் மிக்கதும்
நிறைந்த வாழ்வு நமக்காக
தேற்றிட தேறிட தென்படும் நலமே ,
கொள்வோம் மனதில் உறுதி
அணைப்போம் அமைதி என்றும்

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Jul-20, 12:21 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 169

மேலே