என்னை யார் தொடுவது

இளமை நிரந்தரம்
நினைப்பில்
இருப்போரே

என் அம்மாவை
தழுவி நானும்
வளர்ந்தவள் தான்

என் அப்பாவின்
தோளில் நானும்
சாய்ந்தவள்தான்

என் கணவனின்
தழுவலில் தினம்
சுகம் கண்டவள் தான்

என் குழந்தையை
பெற்று மார்பில்
சாய்த்து வளர்ந்தவள் தான்

அவர்கள் பெற்ற குழந்தைகள் எனை தழுவி வளர்ந்தவர்கள் தான்

இன்று மட்டும்

என்னை தொட்டு
பேச சுற்றம்
தயங்குவதேன்?

வயதின் தளர்வு
உடலின் சுருக்கம்
இவர்களுக்கு வாராதோ!

என் ஏக்கம்
புரிந்தவர் யாரோ
எனை தொட்டு
எப்படி இருக்கிறாய்?

ஆயா, ஆச்சி பாட்டி
ஏதோ ஒன்று
ஏக்கத்தை தீர்க்க

எழுதியவர் : தாமோதரன். (22-Jul-20, 12:47 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 131

சிறந்த கவிதைகள்

மேலே