அரிய முயலாத உண்மை

நோக்குங்கள் கடைத்தெருவை எவ்வூரிலும் நுண்ணியமாய்
எக்கடையில் பளிச்சென்று விளக்குகள் எரியுதென
அக்கடையில் நீள அகலம் தோரயணமாய் கணக்கிடுவீர்
பணியாளரின் எண்ணிக்கையும் அதுபோலவே கணக்கிடுவீர்
தங்கம் விற்கும் கடைகளிலே கணக்கின்றி விளக்கெரியும்
ஆங்கில மருந்து விற்கும் கடைகளிலும் மங்காத விளக்கெரியும்
அங்கத்திற்கு அழகு மூட்டும் கடைகளிலும் அலங்கார
விளக்கெரியும்
ஒருவர் செய்யும் வேலையை செய்ய இவைகளில் ஐவர் பணியில் அமர்ந்திருப்பர்
வேண்டிய கூலியை கொடுக்க நிர்வாகி ஒரு போதும் மனங்கோணார்
காரணம் அரிய ஒரு போதும் இது குறித்து சிந்தித்திருப்போமா
வியாபாரம் செய்யும் இக்கடைகளில் இலாபம் மட்டும் முன்னூறு மடங்கு
பொய்யில்லை ஆய்ந்தறிந்தால் அழகு உண்மை தெரிந்துக் கொள்ளலாம்.
--------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Jul-20, 8:44 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 73

மேலே