அழகியே இதய அழகியே

கோடைக் குளிர்க்காற்றின்
சுகம் முழுவதும் உணர்ந்தேன்
கொளுத்தும் கத்திரி வெயிலிலும்
முல்லை மலர் வாடை எங்கும் வீசியது
அவள் வந்து பக்கம் நின்றாள்
திறமையுள்ள சிற்பி செதுக்கிய
கைவண்ணமாய் அவள் அங்கங்கள்
என்னை மறந்து நின்றேன்
அஞ்சன விழிகளால்
அதை நோக்கினாள்
அன்றலர்ந்த பனிமலராய்
செம்முகம் சிவந்தாள்
ஆசைப் பொதியை
தோழில் கனமாய்ச்
சுமந்த காதல் வேதாளம்
என் நெஞ்சகக் கிளையில் வந்து
சம்மணமிட்டு அமர்ந்து கொண்டது

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (28-Jul-20, 1:20 pm)
பார்வை : 304

மேலே