பெண்ணின் சொர்கவாசல்
சொர்கவாசல்
நேரிசை ஆசிரியப்பா
புரட்சியென்ன்றால் விளங்கா திந்தக் கெட்ட
புறம்போக் குக்கும் பின்னெது அவர்க்குப்
புரியும் கேட்பது புரிகிறது நமக்கு
புரட்சி என்றிட மயங்குவர் மக்கள்
புரட்சி என்றிட போதையில் சுழல்வரோ
கோயில் ஆபாச சிலையாம் கோபுரமாம்
ஆபாச வாசல் வழியில் தானே
ஆத்தாள் பெற்றாள் இவனுமந்த வாசல்
வாயால் பேசுகிறான் ஆபாசம் முட்டாள்
யோனியே பார்க்கா யோகியோ இவனும்
திருடன் திருடி ருசித்த பூனை
திருநங் கையோ ஒருவேளை
திருட்டு முட்டாள் கயவரை விரட்டுமே
தனியொரு வனுக்குண விலையெனில் கெடுக
தனிப்பெரும் படைப்பாளி என்றானே பாரதி
இனியெவன் பேசுவன் இப்படிப் புரட்சி
இடுகாடே நாசூக்காய் பேசு
கீழ்வாசல் சொர்கவாசல் தெரியு முனக்கே