வரலாற்றின் கோலங்கள்

ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டின்
கண் கொள்ளாக் காட்சியாகவும்
உலகின் கண்களுக்கு தெளிவுறும் படி
கண்காட்சியாகவும் மனசாட்சியாகவும்
விளங்கும் விளக்கும் ஓர்இடம்
மியூசியம் எனும் அகராதியே ,
அதை உட்சென்று, உள்வாங்கி
உணர்வு பூர்வமாக பார்க்கும்பொழுது
சிந்தனையில்
பொங்கி எழுகின்ற ஆக்ரோஷம்
அது தரும் பாடங்கள் எண்ணற்றவை
ஏட்டிலடங்கா எண்ணச் சிதறல்கள்,
மக்களின் அமைதி தொலைத்து
நாட்டுக்கு நாடு நடைப் பிணமாக மனிதன்
ஏங்கேயும் விரக்தியின் விளிம்பில்
நிற்கின்ற மக்கள்தான் கண்கூடாக தெரிகின்றது
மாறுமா இந்நிலை மாறுமா/
சாபமா/சரித்திரம் தரும் தொடரா/
கேள்வியின் வேதனை.

எழுதியவர் : பாத்திமாமலர் (3-Aug-20, 11:24 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 142

மேலே