அரசியல்
கவிதைமணி தந்த தலைப்பு
" அரசியல் "
கவிதைமணி நன்றி
○○○
சமூகத்தின் வாழ்வாதாரங்களின் மேல்
அக்கரை கொண்டு சேர வேண்டியதை
சேர வேண்டியவரிடம் சேர்க்க குறுக்கே
நிற்கும் தடை முடையினை உடைத்து
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே
சேர்த்திடும் மைய்யமே அரசியலாகும்
மக்கள் உரிமை காக்கப்பட வரையப் பட்ட சாசனங்களில் நிறைவின்மை
குறைபாட்டினை பாராளுமன்ற துணை
யோடு குறைவை திருத்தி ஷரத்தை மாற்றி வேண்டாததை அகற்றி புதிதாக தீட்டி மக்களிடம் சேர்ப்பது அரசியல்
நோக்கர் அரசியல் நிகழ்வு களைக் கூர்ந்து கவனித்துக் கருத்துக் கூறுபவர் கூடும் நியாய ஆலயமே அரசியல்
கரைபடா கரங்களங்கே தெய்வங்கள்
□
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்