அன்புள்ள மானுடா💥💥

அன்புள்ள மானுடா 💥 💥

நாகரீக மிருகமே!
ஆடை அனிந்த பிராணியே!
குரங்கின் கடைசி அவதாரமே!
சிரிப்பதால் நீ மனிதன்!அன்புள்ள மானுடா
சந்திப்பதால் நீ மானுடம்!

அதை கண்டு பிடித்தார்.
இதை கண்டு பிடித்தார்.
எதையும் கண்டு பிடிக்கவில்லை.
கண்டு அறிந்தார் என்பதே உண்மை.
எது இல்லை இந்த உலகில்.
எல்லாம் உள்ளது நம்மை சுற்றி.
நேற்று அறியபட்ட விஞ்ஞானமும்,
இன்று வெளியிடபட்ட கண்டுபிடிப்பும்,
நாளை கண்டு அறியபோவதும், ஏற்கனவே இந்த மண்ணிலும், விண்ணிலும் உள்ளவையே.
புதியது ஏதும் என்றும் இல்லை.
எல்லாம் பழையது என்று கூட சொல்ல கூடாது.
எல்லாம் உண்மையாக நம்மை சுற்றி, சூழ்துள்ள உள்ள பஞ்சபூதங்கள்.

மானுடத்தின் சிறப்பு...
மகத்தான அவனுடைய அறிவு.
பட்டை தீட்டிய அறிவே
பல சாதனை படைக்கும்.
பல சாகசம் நிகழ்தும்.
மெய் பொருள் கண்டு
மானுடத்திற்கு பலவாறு உதவும்.

தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள எப்பொதும் மனிதனுக்கு ஆசை.
சுவைக்காத உணவை சுவைக்க எப்போதும் மனிதர்களுக்கு ஆசை.
அடையாத புகழை அடைய மானுடத்திற்கு எப்போதும் மயக்கம்.
இப்படி முயன்றால் பார்க்க, அடைய கூடிய
விஷயங்களுக்கே இவ்வளவு போதை என்றால்,
ஆதி மனிதன் முதல் இன்றைய மனிதன்  வரை எவனாலும் பார்க்க படாத,
இது வரை அறியபடாத,
அவன் மிக பெரிய  அதிசயமாக போற்றபடும் ஆண்டவனை காண  அவனுக்கு அளப்பரிய ஆசை இருக்க தானே செய்யும்.

மனிதனின் பயமே கடவுள்.
உயிர் மீது அளவற்ற பற்று வைத்துள்ள மனிதன்
தன் ஆசையையும், சோகத்தையும் யாரிடமாவது சமர்பிக்க
அவனால் கண்டு அறியப்பட்ட ஓர் உண்ணத உருவகம் தான் கடவுளா?   
நாம் அனைவரும் மனித சங்கிலி தான்.
ஆனால்
மனிதன் மீது மனிதனுக்கு
உண்மையில் நம்பிக்கை உள்ளதா?
சரி, அதை விடுங்கள்...
குறைந்த பட்சம் அவன் மீதாவது அவனுக்கு நம்பிக்கை உள்ளதா?

கோயிலும், பக்தியும்
அவனை நல்வழி படுத்தவே தவிர,
பகுத்தறிவு இழுந்து பைத்தியம் ஆவதற்கு அல்ல.
காட்டில் கடும் தவம் இருந்து சித்தர் ஆண்டவனை கண்டாரா? தெரியாது.
உண்மை.
நல்ல மருத்துவம் கண்டறிந்தார்.
முக்தி அடைந்த முனிவர்
என்கிறோம்.
உண்மையில் அவர் முக்தி அடைந்தாரா?
தெரியாது.
உண்மை.
அவரின் அழமான கற்பனையில் மறக்க முடியாத அழகான இதிகாசங்களை எழுதினார்.
அப்போது கடவுள்!!
இதுவரை யாரும் அறியபடாத, பார்த்திராத மிக நல்ல வியக்கத்தக்க கற்பனை கதாபாத்திரம். 
அப்போது இந்த பரபஞ்சம் யார் படைத்தது?
யாருமே இல்லை.
அது சுயம்பு!
அதன் வேதியல் மாற்றமே
எல்லாம், எல்லாம், எல்லாமே, அனைத்தும்.

- பாலு.

எழுதியவர் : பாலு (9-Aug-20, 10:03 pm)
சேர்த்தது : balu
பார்வை : 89

மேலே