KAANIKKAI
காணிக்கை !
கண்களால் பார்த்து 
கைகளால் எடுத்து
மனதால் பிரித்து 
உதடுகளால் படித்து
உள்ளத்தில் பதித்து
நாள்தோறும் வாழ்க்கை படகோடு 
காதல் துடுப்பை  தொடுக்கும் நெஞ்சங்களுக்கும் !
காகிதத்தில் மை பூசி 
கவிதையில் பொய் பூசி
கற்பனையில் சுவை பூசி 
காலத்தோடு காதல் செய்ய துடிக்கும் 
ஒவ்வொரு கலைஞனுக்கும்  !
பேதை , பெதும்பை ,மங்கை , மடந்தை ,
அறிவை ,தெரிவை , பேரிளம்பெண்  போன்ற 
சொற்களுக்கு பூப்பூவாய் உயிர் வாழும் 
உள்ளத்து நெஞ்சங்களுக்கும்  ! 
இக்கவிஞ்சனின்  இக்கவி மலர் சார்பாக 
அனைவருக்கும் என் கவிதையை காணிக்கையாக்குகிறேன் !
அன்புடன்
ராமன் மகேந்திரன்
 
                    

 
                                