ஊடல்
நெருங்கிட வா
விலகிட வா
நீயே சொல் என் தலைவா
உன்னையின்றி எனக்கிங்கு யாருமில்லையே
உண்மை அறிந்த நீயும்
விலகிநிற்பது நியாயமில்லையே
நினைத்தால் வருவேன் அடுத்த நொடியே
நினைவில் வாழ்வேன் எந்தன் உயிரே
புரிதல் இருந்தால் பாசம் விரியுமே
விலகிச் சென்றால் சுவாசம் குறையுமே
உன்னைப் போல் உறவு யாருமில்லையே
உன் நிழலின்றி எனக்கிங்கு துணையுமில்லையே
உன் கைவிரல் கொடுத்தால் போதுமடா
என் வாழ்க்கையில் வசந்தம் வீசுமடா
உன்னருகில் வாழ்ந்திட வேண்டுமே
உயிர் வாழ எனக்கது போதுமே
உறவுக்கு உயிர் கூட மன்னவா
உணர்வுக்கு உயிர் நீயல்லவா
கனவாய் நீயும் கலைந்தால்
கண்ணீர் மழை பொழியும்
கைப்பற்றிட வந்தால் நீயும்
கவலைகள் எல்லாம் மறையும்
என்னுள்ளம் அறிந்த பின்னும்
ஏன் இந்த மௌனம்
உன்னுள்ளத்தில் இருப்பதை அறிந்து
எப்படி பிரிந்திட இயலும்
சரவிபி ரோசிசந்திரா