இயல்பா விந்தையா
ஒற்றுமைத் தேடின் வேற்றுமை புலனாம்
வேற்றுமைத் தேடின் ஒற்றுமை புலனாம்
பகுத்தல் ஆய்வு தொகுத்தல் விளக்கும்
தொகுத்தல் ஆய்வு பகுத்தல் விளக்கும்
ஒளியை எண்ணிட இருள் முந்துறும்
இருளை எண்ணிட ஒளி முந்துறும்
அறிவு ஏகிட அறியாமை தென்படும்
அறியாமை ஏகிட அறிவு என்படும்!
தீ..கோ.நாராயணசாமி